கொக்கிளாய் முகத்துவாரம் மடுமாதா தீவில் அமைந்துள்ள மடு அன்னை ஆலய வருடாந்த திருவிழா 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலி தமிழ் சிங்கள மொழிகளில் இடம்பெற்றதுடன் திருவிழா திருப்பலியை கொக்கிளாய் முகத்துவாரம் பங்குத்தந்தை அருட்தந்தை இயேசு றமேஸ் அவர்களும் கொக்கிளாய் பங்குத்தந்தை அருட்தந்தை ஸ்ரனி சுவாம்பிள்ளை அவர்களும்இணைந்து ஒப்புக்கொடுத்தனர். தமிழில் மறையுரையை அருட்தந்தை வின்சன் மைக்கல் அவர்கள் வழங்கினார்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கொக்கிளாய் முகத்துவாரம் பங்குத்தந்தை அருட்தந்தை இயேசு றமேஸ் அவர்களும் கொக்கிளாய்பங்குத்தந்தை அருட்தந்தை ஸ்ரனி சுவாம்பிள்ளை அவர்களும் மேற்கொண்டிருந்த நிலையில் தீவுக்கான இலவச படகு சேவையை கொக்கிளாய் முகத்துவாரம் பகுதி மக்கள் வழங்கியிருந்தனர்.

By admin