இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தை சேர்ந்தவரும் நற்கருணை நாதர் சபை திருத்தொண்டருமான சபாரட்ணம் சன்ரனா அவர்களின் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த மாதம் 27ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.

கொழும்பு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியிலேயே திருத்தொண்டர் சபாரட்ணம் சன்ரனா அவர்கள் புதிய குருவாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் பணிவாழ்வில் அர்ப்பணிப்புடன் நிலைத்திருந்து இறை பணியாற்ற வாழ்த்தி நிற்கின்றோம்.

By admin