26மே.30.2018. தேவரட்ணம் செல்வரட்ணம் அடிகளார் எழுதிய குருத்துவம் திருமணம்; கொடையும் மறைபொருளும் என்ற நூல் வெளியீடு 28 மே 2018 அன்று கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக்கல்லூரியில் கல்லூரி அதிபர் ரீ.ஜே. கிருபாகரன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ் ஆயர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். இவ் நூலுக்கான வெளியீட்டு உரைய மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. பா.யோ.ஜெபரட்ணம் அவர்களும் நூலின் ஆய்வுரையை தமிழ் இறையியல் கல்லூரி இயக்குனர் அருட்திரு ரவிச்சந்திரன் அவர்களும் நிகழ்த்தினார்கள். இந்நூலின் ஆசிரியர் தேவரட்ணம் செல்வரட்ணம் அடிகளார் 2004ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் மெய்யியலில் இளமாணிப் பட்டத்தையும் இறையியலில் உரோமாபுரி ஊர்பானியானா பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இறையியலில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் யாழ்ப்பாணம் புனித பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவக் கல்லூரியில் இறையியல் விரிவுரையாளராகவும் உருவாக்குனராகவும் பணியாற்றுகின்றார்.aaaaaPresentation1211019

By admin

You missed

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் வளவாளராக பணியாற்றும் ஈழத்து இயக்குனர் திரு. மதிசுதா அவர்களின் சகோதரன் திரு. சுரேந்திரராஜா சாந்தன் அவர்கள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு 33 வருடங்கள் சிறைததண்டனை அனுபவித்து தொடர்ந்து அங்கிருந்து விடுவிக்கப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு நோயுற்று 28ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவரது குடும்பத்தினரின் முயற்சியால் இவர் இந்தியாவிலிருந்து 28ஆம் திகதி மாலை நாடு திரும்ப இருந்த நிலையில் அன்றைய தினம் அதிகாலை மாரடைப்பால் மரணத்தை தழுவிக்கொண்டார். இவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் அமைதிபெற மன்றாடுவோம்.