2023 ஆம் ஆண்டு வத்திக்கானில் நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான ஆயத்தப் பணிகளை யாழ். மறைமாவட்டத்தில் மேற்கொளவதற்கு உதவியாக குருக்கள், துறவியர், பொதுநிலையினருக்கான கலந்துலையாடல் நிகழ்வு கடந்த 14ஆம் திகதி வியாழக்கிழமை குருமுதல்வர் தலைமையில் சூம் செயலி ஊடாக மெயநிகர் நிலையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் ஒன்றிப்பு, பங்கோற்பு, செயற்பாடு ஆகிய தலைப்புக்களில் உரைகள் ஆற்றப்பட்டதுடன் யாழ் மறைமாவட்டத்தில் நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வு தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது. மெய்நிகர் வழியில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்டதின் பல இடங்களிலிருந்தும் 200ற்கும் அதிகமானவர்கள் இணைந்திருந்தார்கள்.

By admin