தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு குமிழமுனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி வாரசிறப்பு நிகழ்வுகள் கடந்த வாரம் அங்கு நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் வழிநடத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் கடந்த 17ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மறைக்கல்வி மாணவர்களுடன் இணைந்த முதியோர், நோயாளர் தரிசிப்புக்கள், செபமாலை பேரணி ,வினாடி வினாப்போட்டி, விளையாட்டு நிகழ்வுகள், களஅனுபவ சுற்றுலா என்பவற்றுடன் போதையை ஒழிப்போம் என்னும் தலைப்பில் கண்டனப்பேரணியும் இடம்பெற்றது.