கிளிநொச்சி அக்கராயன் பங்கின் ஆனைவிழுந்தான் திரு இருதய ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலி நிறைவில் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.
 
அத்துடன் ஆலய சூழலில் வாழும் மக்கள் 40 வருடங்களுக்கும் மேலாக பாவித்துவந்த ஆலய வளாகத்தின் நடுப்புறமாக அமைந்நிருந்த பாதை மூடப்பட்டு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் அனுமதியோடு ஆலய வளாகத்தின் இடதுபுறமாக நிரந்தர பாதையொன்று அமைக்கப்பட்டு திரு இருதய ஆண்டவர் வீதி என்னும் பெயரில் திறந்து வைக்கப்பட்டது.
 
இப்பாதையை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் திறந்துவைத்தார்.

By admin