யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலய அன்பியங்களால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்து பிறப்பு விழா கரோல் வழிபாடு 18ம் திகதி கடந்த சனிக்கிழமை பேராலயத்தில் நடைபெற்றது

. பங்குத்தந்தை அருட்திரு மவுலிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கரோல் வழிபாட்டில் பேராலயத்தை சேர்ந்த 10 அன்பியங்களும் இணைந்து பாடல்களை இசைத்து வழிபாட்டை சிறப்பித்தனர். யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து ஆசிச்செய்தி வழங்கினார். இவ்வழிபாட்டில் குருக்கள் அருட்சகோதரிகள் இறைமக்களென பலரும் இணைந்து இறைவேண்டல் செய்தனர். அத்துடன் யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலய பக்திச்சபைகளால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்து பிறப்பு விழா கரோல் வழிபாடு 22ஆம் திகதி கடந்த புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. குருநகர் பங்குத்தந்தை அருட்திரு யாவிஸ் அவர்கள் தலைமையில் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்ற இக்கரோல் வழிபாட்டில் ஆலயத்தைச் சார்ந்த 9 பக்திச் சபையினர் இணைந்து பாடல்களை இசைத்து வழிபாட்டை சிறப்பித்தனர். இந்நிகழ்வில் விருந்தினர்களாக யாழ் மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு மவுலிஸ் அவர்களும் கொய்யாத்தோட்டம் பங்குத்தந்தை அருட்திரு ஆனந்தகுமார் அவர்களும் கலந்துகொண்டதுடன் கிறிஸ்மஸ் செய்தியை அருட்திரு ஆனந்தகுமார் அவர்கள் வழங்கினார்.

By admin