கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவை முன்னிட்டு 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நற்கருணை பவனிகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படிருந்தன. யாழ். மறைக்கோட்டத்தில்முன்னெடுக்கப்பட்டிருந்த நற்கருணை பவனி யாழ் சுண்டிக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் ஆரம்பமாகி, புனித அடைக்கல அன்னை ஆலயம், குருநகர் புனித யாகப்பர் ஆலயம் ஊடாக புனித மரியன்னை பேராலயத்தை சென்றடைந்து. இப்பேரணி சென்ற ஆலயங்களில் சிறப்பு நற்கருணை வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மாலை 4 மணிக்கு ஆரம்பமாகிய இப்பேரணியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் பக்தியோடு கலந்து கொண்டதுடன் புனித யாகப்பர் ஆலயத்தில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் புனித மரியன்னை பேராலயத்தில் யாழ் மறைமாவட்ட குருமுதல்லர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணை ஆசீரை வழங்கிவைத்தார்கள்.

அத்துடன் உரும்பிராய், சில்லாலை, முல்லைத்தீவு, பலாலி, நாவாந்துறை குமிழமுனை ஆகிய இடங்களிலும் நற்கருணை பவனிகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் ஏராளமான மக்கள் பக்தியோடு இப்பேரணிகளில் பங்குபற்றினார்கள்.

By admin