யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத் துறை, உயர் பட்டப்படிப்புகள் பீடம் மூலமாக ‘கிறிஸ்தவ கற்கைகளில் முதுமாணி’ எனும் உயர் பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இக்கற்கை நெறி ஓராண்டு காலத்திற்குரிய வார இறுதிகளில் நடைபெறும் சுயநிதிக் கற்கைநெறியாகும்.

இக்கற்கை நெறிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி நிறுவனம் ஒன்றிலிருந்து கிறிஸ்தவ சமயம் அல்லது இறையியல் சார்ந்த இளமாணிப்பட்டம் பெற்றவர்கள், எத்துறையிலாவது இளமாணிப்பட்டம் பெற்று குறிப்பிட்டகால சமூகசேவை அல்லது மறைப்பணி அனுபவம் உள்ளவர்களுடன், இளமாணிப்பட்டம் பெற்றிராத பின்வருவோரும் இக்கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கலாம்: நிரந்தர மறையாசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்குக் குறையாத முழுநேர மறைக்கல்வி கற்பித்தல் அனுபவம் உள்ளவர்கள் தேசிய மறையாசிரியர் சான்றிதழ் கற்கையின் மூன்று நிலைகளிலும் சித்தியெய்தியவர்கள், துறவிகள் உருவாக்க சான்றிதழ் பயிற்சியைப் பூர்த்தி செய்த இருபால் துறவியர், இருபது ஆண்டுகளுக்குக் குறையாத பணியனுபவம் உள்ள இருபால் துறவியர் மற்றும் அருள்பணியாளர்கள்.

By admin