கிராஞ்சி பொன்னாவெளி கிராமசேவையாளர் பிரிவிலுள்ள மக்களால், சுன்னங்கல் அகழ்வை எதிர்த்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 3ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை அங்கு நடைபெற்றது.
கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு கிராம மக்கள் இணைந்து முன்னெடுத்த இப்போராட்டத்தில் சுன்னங்கல் அகழ்வால் அப்பிரதேசம் எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகளை முதன்மைப்படுத்தியும் சூழல் மாசடைதல், நன்னீர் உவர்நீராதல், பாரிய குழிகள் தோண்டப்படவுள்ளதால் மண்ணரிப்பு பிரச்சினை மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் பாரிய நெருக்கடிகளை முன்னிறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அங்கு நிறுவப்படவுள்ள தனியார் சீமெந்து நிறுவன தொழிற்சாலைக்கும் எதிர்பும் தெரிவித்தள்ளனர்.
இப்போராட்டத்தில் இணைந்துள்ள மக்கள் வேரவில் சந்திப்பகுதியில் தற்காலிக குடிலமைத்து சுழற்சிமுறையில் அங்கு தங்கி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.