கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பழுதூக்கல் போட்டி 8ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நெல்லியடி மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
 
இப்போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 109 கிலோ எடைப்பிரிவில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவன் செல்வன் டனுஜன் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

By admin