யாழ். மாகாண அமல மரி தியாகிகள் சபையை சேர்ந்த அருட்திரு அன்புராசா அவர்களின் தந்தை கலைத்ததவசி செபஸ்தியான் செபமாலை (குழந்தை மாஸ்ரர்) 8ம் திகதி கடந்த சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

இவர் மன்னார் மறைமாவட்ட கலை வளர்ச்சியில் பெரிதும் பங்காற்றிய சிறந்த ஆழுமை நிறைந்தவர்களில் ஒருவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் அமல மரி தியாகிகள் சபையை சேர்ந்த யாழ் போதனா வைத்தியசாலையின் ஆன்மீகக் குருவாக பணியாற்றிவரும் அருட்திரு சுதர்சன் அவர்களின் தந்தை மனவல் சிலுவைராசா அவர்கள் 12ம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். இவர்கள் இருவரினதும் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin