யாழ். போதனா வைத்தியசாலை கத்தோலிக்க ஆன்மீக குழுமத்தின் ஏற்பாட்டில் அமல மரித்தியாகிகள் சபையை சேர்ந்த ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை நிஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைத்தியசாலை பணியாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கருத்தமர்வு 3ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
போதனா வைத்தியசாலை கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை விஜயேந்திரன் அவர்கள் வளவாளராக கலந்து, வாழ்வின் நேர்மறையான அணுகுமுறை எனும் கருப்பொருளில் கருத்துரை வழங்கினார்.