கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அமல்றாஜ் அவர்களின் தலைமையில் 15ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை அச்சுவேலி பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சௌந்தரநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.