கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா 04ஆம் திகதி சனிக்கிழமை மிகவும் சிறப்பான முறையில் அங்கு நடைபெற்றது.
திருவிழாத் திருப்பலியை கொழும்பு மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.
03ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி, திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், தொடர்ந்து நற்கருணை வழிபாடும், புனிதரின் திருச்சுருப பவனியும் இடம்பெற்று சனிக்கிழமை காலை திருநாள் திருப்பலியும் இடம்பொற்றது.
இவ்வழிபாடுகளில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 3500ற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து வழிபாடுகளில் பக்தியுடன் பங்குபற்றினார்கள்.

By admin

You missed

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் வளவாளராக பணியாற்றும் ஈழத்து இயக்குனர் திரு. மதிசுதா அவர்களின் சகோதரன் திரு. சுரேந்திரராஜா சாந்தன் அவர்கள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு 33 வருடங்கள் சிறைததண்டனை அனுபவித்து தொடர்ந்து அங்கிருந்து விடுவிக்கப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு நோயுற்று 28ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவரது குடும்பத்தினரின் முயற்சியால் இவர் இந்தியாவிலிருந்து 28ஆம் திகதி மாலை நாடு திரும்ப இருந்த நிலையில் அன்றைய தினம் அதிகாலை மாரடைப்பால் மரணத்தை தழுவிக்கொண்டார். இவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் அமைதிபெற மன்றாடுவோம்.