எழுவைதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை யூட் கமில்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மாவட்ட செயலகத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு. ஸ்ரீபவான் அவர்கள் வளவாளராக கலந்து இளையோரை வழிப்படுத்தியதுடன் யாழ். மாவட்ட செயலக கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் திருமதி யாழினி மற்றும் சர்மினி ஆகியோரும் இந்நிகழ்வில் இணைந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் 50 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin