தீவகத்தில் அமைந்துள்ள ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் 150வது யூபிலி ஆண்டு நிறைவுவிழா 17ஆம் திகதி சனிக்கிழமை கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரியின் பழைய மாணவரும் யாழ் மறைமாவட்ட ஆயருமாகிய பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.இந்நிகழ்வில் 150 ஆவது ஆண்டை சிறப்பிக்கும் கைட்ஸ் அன்ரோனியன் நினைவு மலர் வெளியீடும் கல்லூரி மாணவர்களின் தயாரிப்பில் உருவான ‘நிற்க கல்’ என்னும் நாடகமும் மேடையேற்றப்பட்டதுடன் யூபிலி ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கான கேடயம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.
கல்லூரியின் ஆசிரியர்கள்,மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது.

By admin