ஊர்காவற்துறைப் பங்கில் புனித வின்சென் டி போல் சபை அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் பங்குத்தந்தை அருட்பணி ஜெயரஞ்சன் அடிகள் தலைமையில் நடைபெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட இச்சபைக்கு புனித அன்னை தெரேசா பந்தி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட புனித வின்சன் டி போல் சபையின் ஆன்ம ஆலோசகர் அருட்திரு நேசநாயகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கருத்துரை வழங்கியிருந்தார்.

By admin