யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு நிகழ்வு கடந்த 5ஆம் திகதி புதன்கிழமை சாட்டி மண்கும்பான் பள்ளிவாசலில் நடைபெற்றது.

நிறுவன இயக்குனர் அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், சாட்டி பங்குத்தந்தை அருட்தந்தை ஜெகன்குமார் வேலனை பிரதேச செயலர் திரு. சிவகரன், வேலனை பிரதேச சபை செயலாளர் திரு. தியாகச்சந்திரன், மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர் திரு. இராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து விழிப்புணர்வு உரைகள் வழங்கியிருந்தார்கள்.

தொடர்ந்து மரநடுகை நிகழ்வு விழிப்புணர்வு பதாகை திறந்துவைக்கும் நிகழ்வு என்பவற்றுடன் கடற்கரை பிரதேச சுத்தப்படுத்தலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், வேலனை பிரதேச சபை ஊழியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin