உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்து கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் குண்டுதாக்குதல் இடம்பெற்ற தினமாகிய 21ஆம் திகதி காலை 8.45 மணிக்கு 2நிமிட மௌன அஞ்சலியும் தொடர்ந்து கொழும்பு பேராயர் மல்கம் காடினல் ரஞ்சித் அவர்களின் தலைமையில் ஆராதனையும் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எனப்பலர் கலந்து கொண்டனர்.

By admin