உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் பிரதேச பொதுக்குள தனியார்மயப்படுத்தலை எதிர்த்து முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் கடந்த 29ஆம் திகதி அங்கு நடைபெற்றது.
இயற்கை சூழலைப் பாதுகாப்போம் என்னும் செயற்திட்டத்தின் கீழ் இயற்கையை வளமாக்கும் செயற்பாடுகளை ஊக்குவித்துவரும் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனம் இப்போராட்டத்தில் இணைந்து இதற்கான அனுசரணையையும் வழங்கியுள்ளது.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திய பின்னர் பேரணியாகச் சென்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திடமும், விவசாயத் திணைக்களத்திடமும் மகஜர் ஒன்றினை கையளித்ததுடன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இக்கிராம மக்களின் வாழ்வாதரத்துக்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ள இக்குளமானது தனியார்மயப்படுத்தப்படுவது இம்மக்களின் வாழ்க்கையை முற்றுமுழுதாகப் பாதிக்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin