இளவாலை மறைக்கோட்ட மேய்ப்பு பணிப்பேரவை அங்குரார்ப்பண நிகழ்வு 19ஆம் திகதி சனிக்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது. இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட பங்கு அருட்பணிச்சபை பிரதிநிதிகளும் மறைக்கோட்ட பக்திசபை பிரதிநிதிகளும் குருக்களும் துறவிகளும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மறைக்கோட்ட மேய்ப்புபயிசபைக்கான நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு மறைக்கோட்ட மேய்ப்பு பணிப்பேரவை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் கலந்து மறைக்கோட்ட மேய்ப்பு பணிசபையின் செயற்பாடுகள் தொடர்பான விளக்குவுரையை வழங்கினார்.

By admin