இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் இளையோர் மற்றும் திருமணமாகி 15 வருடங்களுக்கு உட்பட்ட குடும்பங்களிற்கான சிறப்பு கருத்தமர்வு 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் உளவளத்துறை வைத்திய நிபுணர் திரு. சிவதாசன் அவர்கள் வளவாளராகக் கலந்து இளையோரின் பிரச்சினைகளைத் தீர்த்து வன்முறைகளற்ற இளம் சமுதாயத்தை கட்டியெழுப்புதல் என்னும் கருப்பொருளில் இளையோருக்கும் உளவள சமூக மேம்பாடு என்னும் கருப்பொருளில் குடும்பங்களிற்கும் கருத்துரை வழங்கினார்.
 
கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் 50க்கும் அதிகமானவர்கள் கலந்து பயனடைந்தனர்.

By admin