மட்டக்களப்பு மயிலத்தமடு பிரதேசத்தில் கடந்த மாதம் 22ஆம் திகதி பல்சமய தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக பௌத்த மதகுருமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தலை கண்டித்து முன்னெடுக்கப்பட்ட கண்டன எதிர்ப்பு போராட்டம் 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இலங்கை திருச்சபையின் யாழ். குருமுதல்வர் அருட்தந்தை செல்வன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கண்டன அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது.
இவ்வறிக்கையில் மயிலத்தமடு பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வை கண்டித்ததுடன் சமய விழுமியங்களை முக்கியத்துப்படுத்தி அங்கு சென்றிருந்த சமயத்தலைவர்கள் சிவில் அமைப்பினர், மற்றும் ஊடகவியலாளர்களுடன் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டிருக்க வேண்டிய சந்தர்ப்பத்தை புறக்கணித்து வன்முறையுடன் நடந்துகொண்டமை கவலையளிக்கின்றதெனவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
அத்துடன் ஊடகவியலாளரின் கருவிகளை பறித்தமை, அச்சுறுத்தி வெற்று கடதாசியில் கையொப்பங்களை பெற்றுக்கொண்டமை போன்ற செயற்பாடுகள், ஊடக சுதந்திரத்தை அவமதிப்பதை சுட்டிக்காட்டி இச்சம்பவம் பற்றிய ஒரு முறையான விசாரனையை மேற்கொண்டு நீதியை உறுதிப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் இவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

By admin