இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜீலி சங் அவர்கள் கடந்த வாரம் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பில் சமய நல்லிணக்கம், சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதில் மதத்தலைவர்களின் பங்கு மற்றும் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இச்சந்திப்பில் மன்னார் மறைமாவட்ட முருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களும் கலந்துகொண்டார்.
தொடர்ந்து அமெரிக்க தூதுவர் அவர்கள் மடுத்திருத்தலத்திற்கு விஜயம் மேற்கொண்டு மடுத்திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அவர்களையும் சந்தித்தார்.