யாழ். மறைமாவட்டத்திலுள்ள புனித யோசப்வாஸ் இறையியல் கல்லூரியில் இறையியல் கற்கைநெறியை நிறைவுசெய்து பட்டம் பெற்றவர்களுக்கும் மற்றும் டிப்ளோமா சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு நிகழ்வு 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்லூரி இயக்குநர் அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து மாணவர்களை கௌரவித்து சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
சிறப்பு விருந்தினராக யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் கௌரவ விருந்தினராக புனித யோசப்வாஸ் இறையியல் கல்லூரியின் முன்னாள் இயக்குநர் அருட்தந்தை ரவிச்சந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
புனித யோசப்வாஸ் இறையியல் கல்லூரி 2012ஆம் ஆண்டு யாழ் மறைமாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 11 வருடங்களாக இயங்கி வருவதுடன் 50 பட்டதாரிகளையும் 17 டிப்ளோமா சான்றிதழ் பெற்றவர்களையும் கடந்த காலங்களில் உருவாக்கியுள்ளது. தற்போது யாழ். மறைமாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் 54 மாணவர்கள் இக்கற்கை நெறியை பயின்று வருகின்றனர்.

 

By admin