இரத்தினபுரி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை அவர்களால் நியமனம் பெற்ற அருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ் அவர்கள் புதிய ஆயராக திருப்பொழிவு செய்யப்பட்டார்.

சிலாபம் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ் அவர்கள் தனது குருத்துவ கல்வியை சிலாபம் மறைமாவட்ட சிறிய குருமடத்திலும் கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்திலும் கற்று 2000ஆம் ஆண்டு சிலாப மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் பணியாற்றியுள்ள இவர் இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் தனது உயர்கல்வியை நிறைவு செய்துள்ளார்.

By admin