இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலயம் கட்டப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவுடன் இணைந்த ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை டெனிசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 16ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருவிழா திருப்பலி நிறைவில் ஆயருக்கான கௌரவிப்பு இடம்பெற்றதுடன் புதிய ஆலயத்திற்கான அடிக்கல்லும் ஆயர் அவர்களால் நாட்டிவைக்கப்பட்டது.