திரைப்பட இயக்குனர் ஆனந்த ரமணண் அவர்களின் இயக்கத்தில் ஈழத்தின் படைப்பாக உருவான ஆறாம் நிலம் திரைப்பட சிறப்புக்காட்சியும் அது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வும் 24ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் நடைபெற்றது.
 
ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குருக்கள் துறவிகள் கலந்து திரைப்படத்தை பார்வையிட்டு திரைப்படம் தொடர்பான கலந்துரையாடலில் பங்குகொண்டனர்.
 
இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர் அவர்களும் கலந்து கொண்டதுடன் அவரின் படைப்பான இத்திரைப்படம் பார்வையாளர்களின் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டது.

By admin