ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்களின் நினைவாக யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தால் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆயர் தியோகுப்பிள்ளை நினைவுப்பேருரை 19ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள பாதுகாவலன் மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத் தலைவர் அருட்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி செல்வமனோகரன் அவர்கள் கலந்து ‘பின்காலனிய இலங்கையில் சமயங்களின் அரசியல்’ என்ற தலைப்பில் இவ்வருடத்திற்கான நினைவுப்பேருரையை ஆற்றினார்.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் ,குருக்கள், துறவிகள் குருமட மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

By admin