யாழ். மறைமாவட்டக் குருவும் திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குனரும் கரம்பொன் பங்குத்தந்தையுமான அருட்தந்தை தயாகரன் அவர்களின் அன்புத்தந்தை சூசைப்பிள்ளை மரியநாயகம் அவர்கள் 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
அத்துடன் யாழ். மறைமாவட்டக் குருவும் உருத்திரபுரம் ஆரோபணம் இளையோர் இல்ல இயக்குனருமாகிய அருட்தந்தை சசிகரன் அவர்களின் அன்புத்தந்தை முத்தையா அலோசியஸ் சிறிஸ்கந்தராசா அவர்களும் மன்னார் மறைமாவட்ட குருவும் கலையருவி சமூகத்தொடர்பு ஆணைக்குழு இயக்குநருமான அருட்தந்தை டக்ளஸ் அவர்களின் அன்புத் தந்தையார் பிரான்சிஸ் சூசைதாசன் லோகு அவர்களும் கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்கள்.
இவர்களின் வாழ்விற்காக நன்றிகூறி ஆன்மாக்கள் இறைவனில் அமைதிபெற மன்றாடுவோம்.