அளம்பில் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
12ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணை விழா இடம்பெற்றதுடன் திருவிழா திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலியின் நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் திருவிழா திருப்பலி வழிபாடுகள் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin