ஆண்டவரை காணிக்கையாக அர்ப்பணித்த திருநாளாகிய கடந்த 2ஆம் திகதி அளம்பில் பங்கில் மெழுகுதிரி தாங்கிய சிறப்பு செபமாலை பவனியொன்று நடைபெற்றுள்ளது.

நாயாறு புனித சூசையப்பர் ஆலயத்திலிருந்து அளம்பில் கடற்கரையில் அமைந்துள்ள அன்னை வேளாங்கன்னி ஆலயம் வரை இப்பவனி நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு ஆரம்பமான பவனி மாலை 8.00 மணிக்கு வேளாங்கன்னி ஆலயத்திற்கு சென்றடைந்து அன்னையின் திருநாள் திருப்பலி அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்திரு பொன்சியன் தலைமையில் அங்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.

By admin