அளம்பில் பங்கில் முன்னெடுக்கப்பட்ட முதல்நன்மை அருட்சாதனம் பெறும் பிள்ளைகளுக்கான பாசறை நிகழ்வு 29ஆம் திகதி திங்கட்கிழமை கொக்கிளாய் மடுமாதா தீவில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஏற்பாட்டில் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அளம்பில், நாயாறு, உடுப்புக்குளம் ஆலயங்களைச் சேர்ந்த முதல்நன்மை பெறும் 23 சிறார்கள் பங்குபற்றினார்கள்.
முல்லைத்தீவு றோ. க பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி டிலிசியா அவர்கள் வளவாளராக கலந்து கருத்துரை, குழு செயற்பாடுகள், விளையாட்டுக்கள் ஊடாக சிறார்களை வழிப்படுத்தினார்.