அளம்பில் நாயாறு புனித சூசையப்பர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

அளம்பில் நாயாறு புனித சூசையப்பர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 03ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை நியூமன் அவர்கள் தலைமை தாங்கி அருட்சாதன திருப்பலியை ஒப்புக்கொடுத்து 03 சிறார்களுக்கு முதல்நன்மை அருட்சாதனத்தை வழங்கிவைத்தார்.