யாழ். பாசையூர் கடற்கரை வீதியில் அமைந்துள்ள திருச்சலுவை கன்னியர்மட வளாகத்தில் வயோதிப அருட்சகோதரிகளின் பராமரிப்புக்காக புதிதாக அமைக்கப்பட்டுவந்த அலோசியா ஹைம் இல்ல கட்டடப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அக்கட்டட திறப்புவிழா 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து சிறப்பித்து திருப்பலியை ஒப்புக் கொடுத்து திருப்பலி நிறைவில் புதிய இல்லத்தை ஆசிர்வதித்து திறந்து வைத்தார்.

By admin