இளவாலை புனித யாகப்பர் பங்கில் “அறிவு சார் பொழுதுபோக்குகளை ஊக்குவிப்போம் என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட தபால் தலைகள் மற்றும் நாணயத்தாள்கள் கண்காட்சி 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இளவாலை எழுச்சியக மண்டபத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் வழிகாட்டலில் புனித யாகப்பர் ஆலய ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது. இக்கண்காட்சியில் ஆசிரியர் திரு. முத்துலிங்கம் வாமணன் அவர்களால் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சேகரிக்கப்பட்ட தபால் தலைகள் மற்றும் நாணயத்தாள்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
இவற்றுள் 80 நாடுகளின் தபால் தலைகள்இ 60க்கு மேற்பட்ட நாடுகளின் நாணயங்களும் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன் 1936ம் ஆண்டில் வழக்கத்திலிருந்த ஆங்கிலேயர் காலத்து 1/2 சதமும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் குருக்கள்இ துறவிகள் கல்விப்பணிப்பாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள்இ சமூகஆர்வலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து பார்வையிட்டனர்.

By admin