யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை மாற்கு றேஜிஸ் இராசநாயகம் அவர்களின் குருத்துவ 50வது ஆண்டு யூபிலி நிகழ்வு 17ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கபட்டு தொடர்ந்து யூபிலி நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றன.
இந்நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்து சிவகங்கை மறைமாவட்டத்தை சேர்ந்த ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை சூசைமாணிக்கம் அவர்களும் அவருடன் இணைந்து வருகைதந்த குருக்களும் யாழ். மற்றும் மன்னார் மறைமாவட்ட குருக்கள் துறவிகள் இறைமக்களென பலரும் கலந்து அருட்தந்தையின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றிகூறி செபித்து நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin