திருச்சிலுவை கன்னியர் அருட்சகோதரிகளின் நிறுவுனர் அன்னை பெர்ணாடாவின் 200வது பிறந்த தினமும் யாழ். நகர் கடற்கரை வீதியில் அமைந்துள்ள திருச்சிலுவை சுகநலநிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 40 ஆண்டுகள் நிறைவு நிகழ்வும் 26ஆம் திகதி இன்று சனிக்கிழமை அங்கு நடைபெற்றது.

கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து திருச்சிலுவை சுகநல நிலையத்தில் கலைநிகழ்வுகளும், வரலாற்று பதிவுகளை உள்ளடக்கிய“சுகநலம்” நினைவு மலரும்
வெளியீடு செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் குருக்கள் துறவிகள் அருட்ககோதரிகளென பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin