08.12.2020 செவ்வாய்கிழமை மாலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணம் அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில், யாழ் போதனா வைத்தியசாலை வீதி பக்கமாக அமைந்திருந்த புனித அற்புத மாத திருச்சுருபம் புனரமைப்பு செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்திரு அன்ரனிதாஸ் அவர்களின் வழிகாட்டலில் அழகிய தோற்றத்துடன் புனரமைப்பு செய்யப்பட்டு காட்சி தரும் அன்னையின் திருச்சுருபம் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களினால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு அன்னையின் அமலோற்பவ பெருவிழாவாகிய இன்றைய தினத்தில் நடைபெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin