அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு உதவித்திட்டங்களின் கீழ் கடந்த ஆவணி, புரட்டாதி மாதங்களில் இளவாலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்ளில் உள்ள வறிய குடும்பங்களுக்கு ரூபா இரண்டு லட்சம் பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இந்நிதியத்தினால் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் வறிய குடும்பங்களின் சுயதொழிலை ஊக்கப்படுத்துவதற்கும் இன்னும் மருத்துவ தேவைகளுக்குமான உதவிகளை புரியும் பல உன்னதமான செயற்திட்டங்கள் முன்னெடுத்துவரப்படுகின்றன.
அருட்தந்தை சறத்ஜீவன் அவர்கள் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் மக்களுடன் இறுதிவரை இருந்து தன்னை பலியாக்கிக்கொண்டவர்.
இவர் முள்ளிவாய்கலில் அரங்கோறிய தமிழ் இனஅழிப்பின் அடையாளமாகவும் திகழ்கின்றார். இவரின் பெயரைக்கொண்ட இந்நிதியம் இவரின் குடும்ப உறவுகளால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பலரின் உதவியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உன்னதமான பணியாற்றிவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin