கர்த்திகை மாதத்தில் நடைபெறும் மறை ஆசிரியர் தேசியத் தேர்வு இவ்வருடம் டிசம்பர் மாதத்தில்

வருடந்தோறும் கர்த்திகை மாதத்தில் நடைபெறும் மறை ஆசிரியர் முதலாம் இரண்டாம்மூன்றாம் பிரிவுகளுக்கான தேசியத் தேர்வுஇ இவ்வருடம் திகதி மாற்றம் செய்யப்பட்டுஇ டிசம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கும்இ கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற திருவிவிலிய அறிவுத் தேர்வு நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக 2022 ம் ஆண்டிற்கும் பிற்போடப்பட்டுள்ளதென யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்திரு ஜேம்ஸ் அவர்கள் அறிவித்துள்ளார். அத்துடன் பங்கு மறைக்கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள மறை ஆசிரியர்களுக்கு கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட 2021 ஆண்டுக்கான கொடுப்பனவு பங்குத்தந்தையர்கள் ஊடாக யாழ். மறைமாவட்டத்தைச் சேர்ந்த 1541 மறை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

Continue reading கர்த்திகை மாதத்தில் நடைபெறும் மறை ஆசிரியர் தேசியத் தேர்வு இவ்வருடம் டிசம்பர் மாதத்தில்

இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினை எட்டுவதில் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் – இலங்கை வடக்கு கிழக்கு ஆயர்கள் ஒன்றியம் தமிழக முதல்வருக்கு கடிதம்

இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ்க் கத்தோலிக்க ஆயர்கள் ஒன்றியம் தமிழக முதல்வர் மரியாதைக்குரிய மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த மாதம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் கடந்த 27.08.2021 அன்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ் நாட்டில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக அவர் ஆற்றிய உரை இலங்கையில் வாழ்கின்ற அனைத்துத் தமிழர்களுக்கும் புதிய உத்வேகத்தையும் மகிழ்சியும் தந்துள்ளதை சுட்டிக்காட்டி, “இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்கள்” இனிவரும் நாட்களில் “இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள்” என்று அழைக்கப்படுமெனக்கூறி அரசாணை பிறப்பித்து அவர்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்குத் தேவையான வீடு, உட்கட்டமைப்பு வசதிகளாகிய குடிநீர், மின்சாரம், கழிப்பிட வசதிகள், பொறியியல் கல்வி மற்றும் கல்விக்கான ஊக்குவிப்புத் தொகை, வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்திறன் போன்ற நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளமையானது, துயரங்களை அனுபவித்த மக்களுக்கு மிகுந்த ஆறுதலையும், மகிழ்வினையும் கொடுத்துள்ளதை குறிப்பிட்டுள்ளனர்.

Continue reading இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினை எட்டுவதில் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் – இலங்கை வடக்கு கிழக்கு ஆயர்கள் ஒன்றியம் தமிழக முதல்வருக்கு கடிதம்

கூட்டொருங்கியக்கத் திருஅவையாகப் பயணிப்போம் உலக ஆயர்கள் மாமன்றத்திற்காக திருத்தந்தையின் அழைப்பு

2023ஆம் ஆண்டு உரோமையில் நடைபெறவுள்ள 16வது உலக ஆயர்கள் மாமன்றம் பற்றி அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், திரு அவை எவ்வாறு ஒரு கூட்டொருங்கியக்கத் திரு அவையாகப் (Synodal Church) பயணிப்பது என்பதை தேர்ந்து தெளிதலே இம் மாமன்றத்தின் நோக்கமெனத் தெரிவித்துள்ளார்.வருகிற ஒக்டோபர் மாதம் 10ம் திகதி வத்திக்கானில் திருத்தந்தை அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்படவிருக்கும் ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புப் பணிகள் எல்லா நாடுகளிலுமுள்ள அனைத்து மறைமாவட்டங்களிலும் வருகிற ஒக்டோபர் 17ம் திகதி மறைமாவட்ட ஆயர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும்.

Continue reading கூட்டொருங்கியக்கத் திருஅவையாகப் பயணிப்போம் உலக ஆயர்கள் மாமன்றத்திற்காக திருத்தந்தையின் அழைப்பு

புனித பிரான்சிஸ் சவேரியர் குருத்துவ கல்லூரியில் 2021/22ற்கான புதிய கல்வி ஆண்டு ஆங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியர் குருத்துவ கல்லூரியில் 2021/22 ற்கான புதிய கல்வி ஆண்டின் ஆங்குரார்ப்பண நிகழ்வு கடந்த முதலாம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் குருமட சிற்றாலயத்தில் நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து புதிய கல்வி ஆண்டிற்கான அரங்க நிகழ்வுகள் குருத்துவ கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற பரீட்சைகளில் சிறந்த பெறுபோறுகளை பெற்ற அருட்சகோதரர்ளுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.

Continue reading புனித பிரான்சிஸ் சவேரியர் குருத்துவ கல்லூரியில் 2021/22ற்கான புதிய கல்வி ஆண்டு ஆங்குரார்ப்பணம்

கிறிஸ்தவ திருச்சபைகள் ஒன்றிணைந்து கூட்டு ஆராதனை

உலகில் பரவி வரும் கொரோணா தொற்றுநோய் நீங்க யாழ். கிறிஸ்தவ திருச்சபைகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கூட்டு ஆராதனை 01.10.2021 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டு ஆராதனையில் யாழ். மறைமாவட்டக் குருக்கள், ஏனைய கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள், இறைமக்கள், இராணுவத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

Continue reading கிறிஸ்தவ திருச்சபைகள் ஒன்றிணைந்து கூட்டு ஆராதனை

குளமங்கால் பங்கில் இரத்ததான முகாம்

குளமங்கால் புனித சதாசகாய அன்னை இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உயிருக்கு உதிரம் என்று அழைப்போடு கொவிட் – 19 பேரிடர் கால இரத்ததான முகாம் குளமங்கால் புனித சவேரியார் ஆலய வளாகத்தில் 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. தெல்லிப்பளை வைத்தியசாலை இரத்தவங்கி குழுவினரின் உதவியுடன் நடைபெற்ற இவ் இரத்ததான முகாமில் 57க்கும் அதிகமான இளையோர் இணைந்து குருதிக் கொடைய வழங்கியிருந்தார்கள். குளமங்கால் பங்குத்தந்தை அருட்திரு பாஸ்கரன் அவர்களின் வழிகாட்டலில் இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

Continue reading குளமங்கால் பங்கில் இரத்ததான முகாம்

பங்கு பணி மாற்றங்கள்

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் கடந்த காலங்களில் பணியாற்றி வந்த அருட்திரு அன்ரனிதாஸ் அவர்கள் தனது பணியை அங்கு நிறைவுசெய்து இளவாலை மறைக்கோட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தின் புதிய பங்குத்தந்தையாக யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களினால் நியமனம் பெற்று பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அத்துடன் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தையாக கடந்த காலங்களில் சுண்ணாகம் பங்கில் பணியாற்றி வந்த அருட்திரு றெக்னே அவர்களும் சுண்ணகாம் பங்கின் புதிய பங்குத்தந்தையாக கடந்த காலங்களில் யாழ். புனித மடுத்தீனர் சிறிய குருமடத்தில் துணைக்குருவாக பணியாற்றி வந்த அருட்திரு ஜெறாட் அவர்களும் அவரின் இடத்திற்கு பாசையூர் பங்கில் உதவிப்பங்குத்தந்தையாக பணியாற்றி வந்த அருட்திரு யூட் கமில்ரன் அவர்களும் ஆயர் அவர்களினால் நியமனம் பெற்று பணிப்பொறுப்புக்களை கடந்த வாரம் ஏற்றுக்கொண்டார்கள்.

Continue reading பங்கு பணி மாற்றங்கள்

சர்வதேச சமாதான தினம்

ஒரு சிறந்த சமத்துவமான, நிலையான உலகத்தை நோக்கி, என்ற தொனிப்பொருளில் இந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச சமாதான தினம் செப்டெம்பர் 21ஆம் திகதி அமலமரித் தியாகிகள் சபையின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தினால் யாழ்ப்பாணத்தில் சாட்டி எனும் கிராமத்திலும் கிளிநொச்சியில் சாந்தபுரம் என்னும் கிராமத்திலும் அனுஷ்டிக்கப்பட்டது. மனிதம் மறைந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் உண்மையான அமைதியை அனுபவிக்க மக்களை ஊக்குவிக்கும் முகமாக சமாதான தினம் அமைந்திருந்தது. இந்நிகழ்வில் அதிகளவு மக்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை இருந்தாலும் குறிப்பிட்ட அளவு தந்தையர்கள் அன்னையர்கள் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue reading சர்வதேச சமாதான தினம்