பெரிய வெள்ளிக்கிழமை ஆண்டவர் யேசுவின் இறப்பை நினைவுகூர்ந்து ஆசந்தி பவனி மேற்கொள்ளும் பாரம்பரியம் யாழ். மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் சிறப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்டடு வருகின்றது.

இந்தவகையில் இவ்வருடம் கொறோனா பெருந்தொற்று பேரிடர் சற்று விலகியுள்ள நிலையில் இரண்டுவருட இடைவெளிக்குப்பின் புதுக்குடியிருப்பு, தாளையடி செம்பியன்பற்று, பொலிகண்டி சக்கோட்டை, மல்வம், இளவாலை, குருநகர் போன்ற பங்குகளில் மிகவும் பக்திபூர்வமான முறையில் மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 160 ஆண்டு கால பழமையும், பாரம்பரியமும் கொண்ட குருநகர் பங்கில் 1883ம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் உடக்குகள் கொண்ட இயேசுவின் பாடுகளின் இறப்பின் காட்சி இவ்வருடமும் வெள்ளி ஆராதனையின் நிறைவில் நடைபெற்றது. உடக்கு பொம்மை சிலுவை மரத்தில் ஏற்றப்பட்டு வியாகுலப் பிரசங்கத்தின் 8ம் பிரசங்கம் வாசிக்கப்படும் அதில் இயேசு வசனித்த 7 வசனங்கள் அன்னை மரியாள் மீது வாள்களாக பாய்வது காண்பிக்கப்பட்டது.

By admin