கூட்டொருங்கியக்க திருஅவையாக பயணிப்போம் என்ற கருப்பொருளில் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான மறைமாவட்டரீதியிலான தயாரிப்புப்பணிகள் நிறைவடைந்தபின் இலங்கையின் அனைத்து மறைமாவட்டங்களும் ஒன்றிணைந்ததான தேசிய மாநாடொன்றை வருகிற ஜுன் மாதம் 14ம் திகதி பொரளையிலுள்ள அக்குவைனாஸ் உயர் கல்விக்கூடத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கைத் திரு அவையில் கூட்டொருங்கியக்கச் செயற்பாடுகளுக்கு பொறுப்பான கொழும்பு துணை ஆயர் பேரருட்திரு அன்ரனி ஜெயக்கொடி தலைமையிலான குழுவினரின் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் இலங்கையிலுள்ள வத்திக்கான் தூதுவரோடு இலங்கையின் எல்லா மறைமாவட்டங்களின் ஆயர்களும், மறைமாவட்டங்களில் கூட்டொருங்கியக்கச் செயற்பாடுகளுக்கு பொறுப்பானவர்களும், தேசிய கூட்டொருங்கியக்கச் செயற்குழு அங்கத்தவர்கள், மற்றும் குருக்கள் துறவியரின் பிரதிநிதிகள், குருத்துவக்கல்லூரிகளின் அதிபர்கள், துறைசார் நிபுணர்கள், பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள், பொதுநிலையினரின் பிரதிநிதிகள், இளையோரின் பிரதிநிதிகள் போன்றோர் பங்குபற்றவுள்ளனர்.

By admin