யாழ் மறைமாவட்டத்தின் பல இடங்களில் தமிழர் திருநாளகிய பொங்கல் பண்டிகை மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. ஆலயங்கள், பொது இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மக்கள் இணைந்து பொங்கல் பொங்கி தைத்திருநாளை சிறப்பித்தார்கள்.

யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 15 அன்பியங்களும் இணைந்து 15 பானைகளில் பொங்கல் பொங்கி நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுத்து இந்நாளை சிறப்பித்தார்கள். இதோபோன்று யாழ். புனித மடுத்தீனார் சிறியகுருமடம், கொழும்புத்துறை புனித சவோரியார் பெரிய குருத்துவக்கல்லூரி, யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் போன்றவற்றிலும் இந்நிகழ்வுகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அத்துடன் கிராமங்களுக்கு இடையே நட்புறவை ஏற்படுத்தும் நோக்கோடு சமாதானத்தை கட்டியெழுப்புதல் என்னும் கருப்பொருளில் அமல மரி தியாகிகள் சபையின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன் கிராம சேவகர் பிரிவில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், விளையாட்டுக்கழகம், ஆலய நிர்வாகம், மற்றும் நன்னீர் மீன்பிடி சங்கம் போன்ற கிராம மட்ட அமைப்புகள் இணைந்து சிறப்பித்தார்கள்.

By admin