அருட்தந்தை சரத்ஜீவன் நிதியத்தினால் மாணவர்களுக்கான ஒருதொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

அருட்தந்தை சரத்ஜீவன் நிதியத்தினால் யாழ். திருநெல்வேலி றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையின் புனரமைப்பு பணிகளுக்காக கடந்த வருடம் ஒருதொகை நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இப் பாடசாலை 1901ஆம் ஆண்டு சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை அப்பாடசாலையில் தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான ஒருதொகுதி கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை அருட்தந்தை சரத்ஜீவன் நிதியத்தின் இயக்குனர் அருட்திரு ஜெயக்குமார் அவர்கள் வழங்கிவைத்துள்ளார். அருட்திரு சரத்ஜீவன் அவர்கள் 2009ஆம் ஆண்டு முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடந்த யுத்தத்தில் இறுதிவரை மக்களுடன் இருந்து மரணித்தவர் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

Your email address will not be published. Required fields are marked *