யாழ்ப்பாணம் றக்கா வீதியில் அமைந்துள்ள புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட செயற்திறன் வகுப்பறைத் திறப்புவிழா 7ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் அருட்சகோதரி மேரி அஞ்சலிக்கா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலையின் புதிய கட்டடத்தொகுதியில் தரம் 3 வகுப்பறையில் அமையப்பெற்ற இச்செயற்திறன் வகுப்பறைகூடத்தை வடமாகாண கல்வித்திணைக்கள பாடசாலை வேலைகள் அலுவலகப் பணிப்பாளர் வேதநாயகம் மேனன் அவர்கள் திறந்துவைத்தது Smart interactive panel board செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழு இயக்குனர் அருட்திரு அன்ரன் ஸ்ரீபன் அவர்களும் யாழ் கல்விவலய உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு சுபகரன் அவர்களும் மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழுச் செயலாளர், பழைய மாணவர் சங்கச் செயலாளர், பொருளாளர் மற்றும் 82 Bosco Kids பிரதிநிதிகள் எனபலரும் கலந்து சிறப்பித்தனர். இவ்வகுப்பறையில் அமையப்பெற்ற Smart interactive panel board 1982ஆம் ஆண்டில் தரம் 5 இல் கல்வி கற்ற மாணவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin