பொலிஸ்மா அதிபர் யாழ் ஆயரை சந்தித்தார்

வடமாகாணத்திற்கு விஜயம் மோற்கொண்ட இலங்கை பொலிஸ்மா அதிபர் விக்ரமரத்னா அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களை கடந்த 13ஆம் திகதி புதன்கிழமை மாலை யாழ். மறைமாவட்ட ஆயரில்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். யாழ்மாவட்டத்தின் தற்போதைய நிலைமை, பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே காணப்படும் உறவுநிலை, வீதிப்போக்குவரத்து தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் போன்ற விடயங்கள் இக்கலந்துலையாடலில் இடம்பெற்றிருந்தன.

Your email address will not be published. Required fields are marked *