மன்னார் மடு அன்னையின் திருத்தலத்தில் மீண்டும் திருக்குடும்ப கன்னியர் சபையினர் தங்களின் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இவர்களின் பணிக்காக புதிதாக அமைக்கப்பட்ட திருக்குடும்ப இல்லம் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி மன்னார் மறைமாவடட ஆயர் இம்மனுவேல் பெர்ணான்டோ அவர்களினால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருக்குடும்ப சபையின் மாகாண தலைவி அருட்சகோதரி தியோபின் குருஸ் திருக்குடும்ப துணைகுருவும் மடு திருத்தலத்தின் பரிபாலகருமான அருட்திரு பெப்பி சோசை அவர்களும் அவர்களுடன் துறவிகள் குருக்கள் பொதுநிலையினர் என பலரும் இணைந்து இந்நிகழ்வினை சிறப்பித்தார்கள்.

ஆரம்பகாலங்களில் பிரான்சிஸ்கன் துறவியினர் அங்கிருந்து வெளியேறிய பின்னர் திருக்குடும்ப கன்னியர் சபையினர் 1969 ஆம் ஆண்டு தங்களின் பணிகளை அங்கு ஆரம்பித்தனர். பின்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 2008 ஆம் ஆண்டில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இடைப்படட சிலகாலம் இயங்கி 2015 ஆம் ஆண்டில் சபையின் தலைமைப்பீடத்தின் அனுமதி பெற்று பணி நிறுத்தப்பட்டு இல்லம் மூடப்பட்டது. மீண்டும் தற்போது இவர்கள் தங்களின் பணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

By admin