புதுபொலிவுடன் புனித வளனார் மூதாளர் காப்பகம்

கொழும்புத்துறை புனித வளனார் மூதாளர் காப்பக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிர்வாக கட்டடத்தொகுதி 28.11.2020 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ்.மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகம் அவர்களினால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டடத் தொகுதி ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் நிதி அனுசரணையுடன் அழகிய தேற்றத்துடன் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வளாகத்தில் அமையப்பெறவுள்ள மூதாளர் தங்குமிட கட்டடத் தொகுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வும் இடம் பெற்றது.

இதற்கான அடிக்கல் மறைமாவட்ட நிதி முகமையாளர் அருட்திரு நேசன் அவர்களினால் நாட்டப்பட்டதுடன் இக்கட்டடம் அமைப்பதற்கான நிதி அனுசரணையினையும் ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகமே மேற்கொள்ள இருக்கின்றது. இப்பணியகத்தின் இயக்குனர் அருட்திரு நிருபன் அவர்களின் கடின முயற்சியுடனேயே இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Your email address will not be published. Required fields are marked *